டெல்லி: இந்திய நிறுவனங்களில் அதிக சொத்து மதிப்புடன் இருக்கும் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் குழுமம் ரூ3.68 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது.
உலக நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது, மேலும் 2014ஆம் ஆண்டின் 3வது காலாண்டில், நாட்டின்ன் வளர்ச்சி சீனாவை மிஞ்சியது.
பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 7வது இடத்தை பெற்றுள்ள நிலையில், மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் நாட்டில் அதிக சொத்து மதிப்புடைய டாப் 10 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.
மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை
இந்திய நிறுவனங்கள் பங்குச்சந்தைக்கு அளித்த மார்ச் 2014ஆம் ஆண்டுக்கான இருப்பு நிலைக் அறிக்கையை வைத்து கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் அதிக சொத்து மதிப்புடைய நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் 89,000 கோடி ரூபாயில் இருந்து 3.68 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளது.
அருண் ஜேட்லி
இப்பட்டியலை நிதியமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இதில் 8 பொதுத்துறை நிறுவனங்களும், 2 தனியார் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது.
மொத்த மதிப்பிடு
இந்தியாவில் உள்ள 4.16 இலட்ச நிறுவனங்களின் மொத்த மதிப்பீடு 117.08 இலட்சம் கோடியாக உள்ளது. இதில் டாப் 10 நிறுவனங்களின் மதிப்பு மட்டும் 17.89 லட்சம் கோடி ரூபாயாகும், மொத்த மதிப்பிட்டில் 15 சதவீதத்தை டாப் 10 நிறுவனங்கள் பெற்றுள்ளது.
முதல் இடம்
இப்பட்டியலில் 3.68 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியன் ஆயில்
மத்திய எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் 2.52 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி
ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்த மற்றொரு தனியார் துறை நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் இப்பிட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
பவர் பைனான்ஸ் கார்ப்
மின் வாரியத்துறை நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப் நிறுவனம் 1.94 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
என்டிபிசி
இப்பிட்டியலில் என்டிபிசி நிறுவனம் 1.80 லட்சம் சொத்து மதிப்புடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.
ஊரக மின்மயமாக்கல் நிறுவனம்
ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corp) இப்பட்டியலில் 1.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற நிறுவனங்கள், பவர் கிரின்டு (1.40 லட்சம் கோடி ரூபாய்), எல்ஜசி ஹவுசிங் பைனான்ஸ் (95,777 கோடி ரூபாய்), ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (91,962 கோடி ரூபாய்) மற்றும் பிஎஸ்என்எல் (89,333 கோடி ரூபாய்).
7வது இடத்தில் இந்தியா
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications