டெல்லி: 2014-15ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாத காலகட்டத்தில் நாட்டின் மறைமுக வரி வசூல் சுமார் 7.4 சதவீத அளவு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையில் மறைமுக வரியாக சுமார் 4,78,630 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
7.4% உயர்வு
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் மறைமுக வரி 4,41,565 கோடியாக இருந்தது குறிப்பிட்டதக்கது. நடப்பு நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 7.4 சதவீதம் உயர்வாகும்.
சுங்க வரி
2014ஆம் நிதியாண்டின் 11 மாத காலகட்டத்தில் சுங்க வரி அளவு சுமார் 8.3 சதவீதம் உயர்ந்து 1,70,943 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் சுங்க வரி வசூல் 1,57,944 கோடி ரூபாயாக உள்ளது.
சேவை வரி மற்றும் கலால் வரி
சுங்க வரியை போலவே சேவை வரியும் 8.3 சதவீதம் உயர்ந்து 1,45,007 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் கலால் வரியும் 5.3 சதவீதம் உயர்ந்து 1,62,680 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடதக்கது.
நேரடி வரி வசூல்
இதே காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 10.67 சதவீத அதிகரித்து 6.12 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி முதலான காலக்கட்டங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 5.53 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications