மும்பை: பன்னாட்டு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ் இன்க் நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனமான மார்ஸ் இண்டர்நேஷ்னல் இந்தியா நிறுவனம் புனே அருகில் கேந்த் என்னும் பகுதியில் சுமார் 1,005 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய சாக்லேட் உற்பத்தி ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைந்தப்பின் நிறுவப்பட்ட அதிக மதிப்புடைய இரண்டாவது மிகப்பெரிய திட்டம் இது.
ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் சீடிஎஸ்
சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டத்தையும், சீடிஎஸ் நிறுவனத்தின் 1,000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தையும் நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இப்பகுதியில் அதிகப்பதிப்புடைய திட்டங்களில் மார்ஸ் இன்க் உள்ளது.
சீடிஎஸ்
மேலும் சீடிஎஸ் நிறுவனத்தின் 1,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு இம்மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடதக்கது. இதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என இம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம்
புதன்கிழமை மார்ஸ் இண்டர்நேஷ்னல் இந்தியா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் சாக்லேட் உற்பத்தியில் கேட்பெரி மற்றும் ஃபெரர்ரோ ராட்சர் நிறுவனத்திற்கு அடுத்து முன்றாவது நிறுவனமாக மார்ஸ் நிறுவனம் உள்ளது.
வேலைவாய்ப்பு
இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் 200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெறும் என மார்ஸ் இண்டர்நேஷ்னல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications