டெல்லி: இந்திய ரயில்வே துறை 2015ஆம் நிதியாண்டில் ரூ.50,000 கோடி வருமானத்தை பெற திட்டமிட்டு வரும் நிலையில், ரயிலில் டிக்கெட் பெறாமல் வித்அவுட்-இல் பயணம் செய்யும் மக்களின் மூலம் மத்திய அரசு சுமார் ரூ.2,000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் அறிக்கையில், இத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில் கட்டணங்களை உயர்த்தவில்லை. இதனால் சமானிய மக்கள் மத்தியில் ரயில்வே பட்ஜெட் பெரும் வரவேற்பை பெற்றது.
ரயில் டிக்கெட்
பயணிகள் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாலும், சரியான டிக்கெட் எடுக்காமல் அதிக தூரத்திற்கு பயணம் செய்வதாலும் ரயில்வே துறைக்கு கடந்த 4 வருடங்களில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இத்துறை தெரிவித்துள்ளதாக இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் கூறுகிறது.
சராசரி விகிதம் அதிகரிப்பு
2000-01ஆம் நிதியாண்டில் தலைக்கு 10 பைசாவாக இருந்த நஷ்ட விகிதம், 2012-13ஆம் ஆண்டு காலகட்டத்தில் 23 பைசாவாக உயர்ந்துள்ளது என ரயில்வே துறை வருத்தம் தெரிவித்துள்ளது.
4.5 கோடி மக்கள்
அர்ஜென்டீனா நாட்டின் மக்கள் தொகையை விட அதிகளவிலான இந்திய மக்கள், ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து வருவதாக புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 4 வருட காலகட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 4.5 கோடி மக்களின் மூலம் 1,915 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள்
2013-14ஆம் ஆண்டு காலகட்டத்தில் வடக்கு மண்டல பகுதியில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளதாகவும், மத்திய மண்டல பகுதியில் 84 கோடி ரூபாய் அதிகப்படியான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications