ஏப்.1, 2, 3 வங்கிகள் விடுமுறை! 5 நாட்களுக்கு வங்கி சேவை பாதிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஏப்ரல் 1 முதல் 3ஆம் தேதி வரை இந்தியாவின் பல பகுதிகளில் மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியின் காரணமாக பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூடப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 5 நாட்களுக்கு நாட்டில் வங்கி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

வருடாந்திர வங்கி கணக்கை முடிக்கும் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி நாட்டில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் முடப்படுகின்றன.

5 நாட்கள்

5 நாட்கள்

ஏப்ரல் 2ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 4ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமே வங்கி செயல்படும்.

ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே முழுமையான வங்கிச் சேவை மார்ச் 31ஆம் தேதிக்கு பின் ஏப்ரல் 6ஆம் தேதியன்று தான் துவங்கும்.

 

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 1, 2, 3 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது என இந்திய வங்கிகள் அமைப்பு தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சில மாநிலங்களில் ஏப்ரல் 2 வேலை நாளாகவும், மீதமுள்ள மாநிலங்களில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று வேலை நாளாக இருக்கும் என இவ்வமைப்பு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

 

இண்டர்நெட் பாங்கிங்

இண்டர்நெட் பாங்கிங்

ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வரையிலான காலகட்டங்களில் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகளை 24 மணிநேரமும் பெறலாம் எனவும் இந்திய வங்கிகள் அமைப்பு கூறுகிறது.

விடுமுறை

விடுமுறை

பொதுத்துறை வங்கிகள் விடுமுறை நாட்களில் செயல்படக்கூடாது என மாற்று முறை ஆவணச் (Negotiable Instruments Act) சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது, எனவே இதற்காக வங்கி நிர்வாகம், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான அறிவிப்பையும் எதிர்பார்க்க தேவையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank holidays to hit customers

Public sector banks will be closed from April 1 to 3, followed by the weekend, in many parts of the country, causing inconvenience to customers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X