ரூ.900 கோடி ஆஸ்திரேலிய டீல்... குழாயடிச் சண்டையில் இன்போசிஸ்- அக்சன்ச்சர்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: ஆஸ்திரேலியா நிதி சேவை நிறுவனமான மேக்குவரி குரூப் (Macquarie Group) நிறுவனத்தின் ஐடி கான்டிராக்ட் பெற இந்திய நிறுவனமான இன்போசிஸ் மற்றும் அக்சன்ச்சர் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன.

 

எந்த விலை கொடுத்தாவது இந்த டீலைப் பெற்றுவிடும் மும்முரத்தில் உள்ளன இரு நிறுவனங்களும்.

இந்த 900 கோடி கான்டிராக்ட் பெற இந்திய நிறுவனங்கள் குழாயடிச் சண்டையில் இறங்கக் கூடத் தயாராக இருந்தன, ஆனால் கார்பரேட் என்ற சட்டை அணிந்திருந்ததால் தந்திரமான முறையில் சண்டையிட்டுக் கொண்டன.

5 வருட திட்டம்

5 வருட திட்டம்

மேக்குவரி குரூப் நிறுவனத்தின் 5 ஆண்டு திட்டத்தில் அப்ளிக்கேஷன் டெவலப்மென்ட், டெஸ்டிங் மற்றும் IMS சேவைகள் அடக்கம். இத்திட்டத்தைப் பெறுவதன் மூலம் சுமார் 15 முதல் 25 சதவீதம் வரை லாபம் அடையலாம். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.900 கோடி (150 மில்லியன் டாலர்) ஆகும்.

மேக்குவரி குரூப்

மேக்குவரி குரூப்

இந்நிறுவனம் ஆஸ்திரேலியாவில் வங்கியில், நிதிச் சேவை, ஆலோசனை, முதலீடு மற்றும் நிதி மேலாண்மை சேவை என பல சேவைகளை வழங்கி வருகிறது. இக்குழுமம் 28 நாடுகளில் 13,900 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இன்போசிஸ்- அக்சன்ச்சர்

இன்போசிஸ்- அக்சன்ச்சர்

இவ்விரு நிறுவனங்கள் மேக்குவரி குரூப் நிறுவனத்துடன் ஏற்கெனவே இணைந்து பணியாாற்றியுள்ளன. எனவே இரு நிறுவனங்களுக்குமே இத்திட்டம் கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இந்திய நிறுவனங்கள்
 

இந்திய நிறுவனங்கள்

மேக்குவரி குரூப் நிறுவனம் இன்போசிஸ், அக்சன்ச்சர் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஹெச்சிஎல், காக்னிசன்ட் மற்றும் ஜென்பாக்ட் நிறுவனங்களுடனும் பணியாற்றியுள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

மேலும் இத்திட்டத்தை கைப்பற்ற இரு நிறுவனங்களும் அதிகளவிலான தொகையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இரு நிறுவனங்களும் இத்திட்டத்தை கைபற்றும் கட்டாயத்தில் உள்ளது. இதற்கான காரணம் விப்ரோ மற்றும் ஹெச்.பி நிறுவனங்கள் தான்.

விப்ரோ

விப்ரோ

இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான விப்ரோ, அமெரிக்காவின் GCWW நிறுவனத்தின் 133 மில்லியன் டாலர் மதிப்புள்ள CRM திட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஹெச்.பி

ஹெச்.பி

இதேபோல் ஹெச்.பி நிறுவனம் இந்த வருடம் அனைத்து இந்திய நிறுவனங்களுக்கும் போட்டி அளிக்கும் வரையில் 3 திட்டங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 130 மில்லியன் டாலர் ஆகும்.

வர்த்தக மேம்பாடு

வர்த்தக மேம்பாடு

இத்திட்டத்தைக் கைபற்றுவதன் மூலம் சரிவு பாதையில் இருந்து மீண்டு வந்த இன்போசிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை நிலை நாட்டிக்கொள்ள முடியும். இத்திட்டத்தை கைபற்றுவதற்காக விஷால் சிக்கா தனி கவனத்தை செலுத்தி வருவதாகவும் இன்போசிஸ் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys, Accenture in last lap for Rs 900-crore deal in Australia

Infosys and Accenture have entered the final lap to clinch a Rs 900-crore ($150 million) IT outsourcing contract from Australia-based financial services provider Macquarie Group.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X