மும்பை: 2014ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாள் நெருங்கும் நிலையில் இந்திய சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இத்தனைக்கும் அதிகளவிலான அன்னிய முதலீடுகள், ஆசிய சந்தையில் சிறப்பான வர்த்தகம் நிலவினாலும், பங்குச் சந்தை நிலவரம் இன்று டல்தான்.
மார்ச் மாத பங்கு ஒப்பந்தங்கள் வருகிற வியாழக்கிழமை காலாவதியாகும் என்பதால்தான் இந்த சுமாரான வளர்ச்சி.
பங்குச் சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்களின் ஈடுப்பாடு அதிகளவில் இல்லை. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 87 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக துவக்கத்தில் உயர்வை சந்தித்தாலும் வர்த்தக முடிவில் சரிவு ஏற்பட்டது. .
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை, இதனால் சென்செக்ஸ் குறியீடு 87 புள்ளிகள் மட்டுமே உயர்ந்ததுள்ளது. இந்நிலையில் 12 மணியளவில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் உயர்ந்து 28,189.07 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டியும் மிகவும் குறைந்த அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் 3.65 புள்ளிகள் உயர்ந்து 8,546.60 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
முக்கிய துறைகள்
சகாதார துறை, ஐடி, மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் இன்று அதிகளவிலான உயர்வை எட்டியுள்ளது.
உலக சந்தைகள்
ஜாப்பான் நிக்கி குறியீடு 0.09 சதவீத உயர்வும், ஹாங்காங் சந்தை 0.40 சதவீத உயர்வும் கண்டுள்ளன. சீன வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் அளித்த அறிக்கை இந்நாட்டு சந்தையை பாதித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சீன பங்குச்சந்தை 0.89 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வத்தகத்தில் சன் பார்மா, டாக்டர் ரெட்டி, சிப்லா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற நிறுவனங்கள் உயர்வை சந்தித்துள்ளது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
அரசு துறை நிறுவனங்களான கெயில், என்டிபிசி, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, பெல் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications