டெல்லி: ரூ.2,857.83 கோடி மதிப்பிலான 10 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுள்ளது.
இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம்காட்டி வரும் நிலையில் வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் (FIPB) முதலீட்டுக்கான விண்ணப்பங்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.
புதன்கிழமை நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் 10 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அம்புஜா சிமென்ட்ஸ்
அம்புஜா நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான ஹோல்சிம் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திடம் உள்ள 24 சதவீதப் பங்குகளைக் கையகப்படுத்த, அந்நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட ரூ.3,500 கோடி மதிப்பிலான பங்கு பரிமாற்ற திட்ட விண்ணப்பத்தை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA)வின் ஆய்வுக்கு FIPB பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
18 திட்டங்கள் ஒத்திவைப்பு
ஐ.டி.எஃப் .சி நிறுவனம் வைத்திருக்கும் கட்டாய மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்கள் (சி.சி.டி) மற்றும் மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (சி.பி.பி) ஆகியற்றை பேரிங் தனியார் பங்குகளாக மாற்ற ஷேர்கான் லிமிடெட் அளித்த விண்ணம் உள்ளிட்ட18 திட்டங்கள் மீது முடிவெடுப்பதை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்.ஐ.பி.பி) தள்ளி வைத்துள்ளது.
பொருளாதார விவகார அமைச்சரவை குழு
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தால் (எஃப்.ஐ.பி.பி) ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ 1,200 கோடி மதிப்பிலான திட்டங்கள், பொருளாதார விவகார அமைச்சரவை குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பிற திட்டங்கள்
இதை தவிர ஹாங்காங் நாட்டை சேர்ந்த வாகோல் இண்டர்நேஷ்னல், ஒஸ்ட்ரோ எனர்ஜி, ஐபிசிஏ லேப்ஸ், ரிக்கிட் பென்கீசர், சைஜீன் இண்டர்நேஷ்னல் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications