ஒரு வழியாக ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது.. கஜானாவில் 1.10 லட்சம் கோடி!
டெல்லி: மார்ச் 4ஆம் தேதி துவங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலம் 19வது நாள் ஏல கடைசியில் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.
ஏலத்தில் பங்குபெற்ற நிறுவனங்களிடம் இருந்து ஆரம்ப தொகையை பெற்றுக்கொண்டு ஏலத்தை முடித்துக்கொள்ள மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

4 பேண்டுகளில் 380MHz ஸ்பெக்ட்ரம் அலைகற்றையை ஏப்ரல் 4ஆம் தேதி ஏலம் விட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதன் பிடி ஏலம் துவங்கி 19வது நாள் முடிவில் மத்திய அரசு சுமார் 1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்கள், மூன்றில் கால் பங்கு பணத்தை 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை அடுத்து 10 ஆண்டுகளில் வருடாந்திர தவணை முறையில் செலுத்து வேண்டும் என தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications