எண்ணெய் இறக்குமதியை 10%-ஆக குறைக்க வேண்டும்: நரேந்திர மோடி
டெல்லி: சர்வதேச சந்தையில் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 இடங்களில் உள்ளது.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 2022ஆம் வருடத்திற்குள் எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் இன்று துவங்கி என்ர்ஜி சுமிட் கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 80 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் அளவை 10 சதவீதமாக குறைக்கும் பட்சத்தில் இறக்குமதிக்காக செலவிடப்படும் பணத்தை அதிகளவில் சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications