புதிய உச்சத்தில் அன்னிய முதலீடு.. 339.99 பில்லியன் டாலர்
மும்பை: மார்ச் 20ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய முதலீடு அளவு 4.26 பில்லியன் டாலர் உயர்ந்து 339.99 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு அறிகுறிகளால் நாட்டின் அன்னிய முதலீட்டின் அளவு 2.036 பில்லியன் டாலர் குறைந்திருந்தது.

தற்போது மத்திய கிழக்கு நாட்டுகளில் நடந்து வரும் போர் பிரச்சனைகள் காரணமாக இந்திய சந்தையில் முதலீட்டு அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அன்னிய நாணய இருப்பு அளவு மார்ச் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.54 பில்லியன் டாலர் அதிகரித்து 314.88 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் நாட்டின் தங்க இருப்பு அளவு மாற்றம் எதுமில்லாமல் 19.837 பில்லியன் டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications