டெல்லி: இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இத்தருணத்தில், சந்தையில் குதிக்க 6 நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக சந்தை கட்டுப்பாட்டு ஆணையாமான செபி தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் இறங்குவதன் மூலம் இந்த 6 நிறுவனங்களும் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான நிதியைத் திரட்டும் திட்டத்துடன் உள்ளது. செபி-யின் ஆய்வுக்கு பின் இந்நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
6 நிறுவனங்கள்
ஏஜிஎஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜிஸ், எஸ்.ஹெச் கெல்கர் அண்ட் கம்பனி, ஸ்ரீ சுபம் லாஜிஸ்டிக்ஸ், ஃப்ரிசிஷன் கேம்ஷாப்ட்ஸ், பென்னார் இன்ஜினியர்ட் பில்டிங் சிஸ்டம்ஸ் மற்றும் எஸ்எஸ்ஐபிஎல் ரிடைல் ஆகிய 6 நிறுவனங்கள் பங்குசந்தையில் இறங்குவதற்காக செபியிடம் முழுமையான விண்ணபம் அளித்துள்ளது.
இண்டிகோ
2,500 கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்துடன் அதிக சந்தை மதிப்புடைய தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் பங்குச்சந்தையில் இறங்க தேவையான பணிகள் செய்து வருகிறது. இதற்கான விண்ணப்பம் இன்னும் செபியிடம் அளிக்கப்படவில்லை.
2,000 கோடி ரூபாய்
சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பம் அளித்த 6 நிறுவனங்கள் 2,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் திரட்டப்படும் நிதியை நிறுவன விரிவாக்கம், கடன் தொகையை செலுத்துதல், நிறுவன முதலீடு அதிகரித்தல் ஆகிய காரணங்களுக்குகாக பயன்படுத்தபடும் என இந்நிறுவனங்கள் கூறுகிறது.
2 சதவீத உயர்வு
இந்த ஆண்டு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு பங்குசந்தையில் இறங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவை அனைத்தும் அடுத்த சில மாதங்களில் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications