பெங்களுரூ: எஸ்ஏபி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான அனிர்பன் டே மற்றும் கவுஸ்தவ் மித்ரா ஆகியோர் இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அனிர்பன் டே இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான எட்ஜ்வெர்வ் நிறுவன தயாரிப்புகளின் தலைவராகவும், கவுஸ்தவ் மித்ரா புதிய தயாரிப்புகளின் துணை தலைவராகவும் இன்போசிஸ் நிர்வாகம் நியமித்துள்ளது.
விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாக விஷால் சிக்கா பதவியேற்றிய பின்னர் தான் பணியாற்றிய எஸ்ஏபி நிறுவனத்தில் இருந்து பல முக்கிய பணியாளர்களை இன்போசில் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
2014ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து 12க்கும் அதிகாமான உயர்மட்ட அதிகாரிகள் வெளியேறிய காரணத்தால் இந்நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் முடங்கியது. சிக்காவின் நியமனத்திற்கு பின் இந்நிறுவன செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது.
அனிர்பன் டே
இன்போசிஸ் எட்ஜ்வெர்வ் நிறுவன தயாரிப்புகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட பின், இப்பதவியில் இருந்த சஞ்சய் ஃப்ரோஹித் இன்போசிஸ் கன்சல்டிங் வர்த்தகத்தின் தலைவராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்ஏபி நிறுவனத்தில் அனிர்பன் டே
அனிர்பன் டே எஸ்ஏபி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போது இந்நிறுவன நிர்வாக தலைவர்களுக்கு மொட்டை கடிதம் போல் மொட்டையான ஈமெயில் அனுப்பியதால், நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கான்கர்
அதன் பின் அனிர்பன் டே கான்கர் என்னும் பயணம் மற்றும் செலவீண மேலாண்மை நிறுவனத்தின் துணை தலைவராக சேர்ந்தார். இந்நிறுவனத்தை எஸ்ஏபி நிறுவனம் 8.3 பில்லியன் டாலருக்கு கைபற்றியதால் மீண்டும் எஸ்ஏபி நிறுவனத்தில் டே இணைந்தார்.
கவுஸ்தவ் மித்ரா
எஸ்ஏபி நிறுவனத்தின் ஸ்டார்ட்அப் ஃபோகஸ் பிரிவின் துணை தலைவராக பணியாற்றி வந்த கவுஸ்தவ் மித்ரா அமெரிக்கவை மையமாக வைத்துக்கொண்டு செயல்படும் இன்னோவேஷன் எகோசிஸ்டம்ஸ் பிரிவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications