டெல்லி: 2014ஆம் நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் புதிய நிதியாண்டில் சுகன்யா சம்ரித்தி (செல்வமகள் சேமிப்பு திட்டம்), பிபிஎஃப், தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் இதர சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இப்புதிய வட்டி வகிதம் 2015ஆம் நிதியாண்டு முழுவதும் அமலில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
பிரதமர் துவங்கி வைத்த சுகன்யா சம்ரித்தி திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது. 2015ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்கான வட்டி வகிதத்தை 9.1% வட்டி விகிதத்தில் இருந்து 9.2%ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு இரண்வது இடம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
நாட்டின் மூத்த குடிமக்களுக்கு அதிகம் பலன் அளிக்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான (SCSS) வட்டி வகிதம் 9.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிபிஎஃப் மற்றும் கிஸான் விகாஸ் பத்திர
மேலும் அதிக வரி பயன் கிடைக்கும் முதலீட்டு திட்டமான பிபிஎஃப் திட்டத்தின் வட்டி வகிதத்தை மத்திய அரசு எந்த விதமான மாற்றமும் செய்யவில்லை. இதனால் கடந்த வருடம் நிலவிய 8.7 சதவீத வட்டி வகிதம் இந்த வருடமும் தொடர்கிறது.
அதேபோல் மத்திய அரசு அளிக்கும் பிற சேமிப்பு திட்டங்களிலும் வட்டி வகிதம் மாற்றம் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications