மும்பை: நாட்டின் இரு முக்கிய தனியார் வங்கிகளான கோட்டாக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கி இணைய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இரு வங்கிகள் இணைப்பிற்கு பணியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் வங்கி நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் இணைப்பிற்கான ஒப்புதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது குறிப்பிடதக்கது.
4வது மிகப்பெரிய வங்கி
இவ்வங்கிகள் இணைப்பதன் மூலம் இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய தனியார் வங்கியாக இக்கூட்டணி உருவாக உள்ளது.
ஏப்ரல் 1, 2015
செவ்வாய்கிழமை ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற இந்நிறுவனங்கள், ஏப்ரல் 1, 2015 அன்று முதல் அதிகாரப்பூர்வமாக இணைப்பு சாத்தியமாகும் என கோட்டாக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
சொத்து பரிமாற்றம்
நிறுவன இணைப்பின் மூலம் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு மாற்றப்பட உள்ளது.
புதிய வங்கி
இப்புதிய கூட்டணி வங்கிக்கு இந்தியா முழுவதும் தற்போது 1,214 வங்கிகள் கொண்டு செயல்பட உள்ளது. மேலும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியில் 10,000 பணியாளர்களும், கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 29,000 பணியாளர்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
15,000 கோடி ரூபாய்
கோட்டாக் மஹிந்திரா, ஐஎன்ஜி வைஸ்யா வங்கிகளுக்கு இடையே நடந்த இந்த இணைப்பு ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications