மும்பை: இந்திய சில்லறை விற்பனை சந்தையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவனம், இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்பாமல் அமெரிக்க பங்குச்சந்தையில் குதிக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு, இந்தியாவில் வர்த்தகம் செய்யும் இந் நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையில் இறங்குவதன் மூலம் அடுத்த 12-18 மாதங்களில் 5 பில்லியன் டாலர் பணத்தை திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கிகளுடன் இணைப்பு
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடும் பணியில் பிளிப்கார்ட் நிறுவனம் சில முக்கிய முதலீட்டு வங்கிகளுடன் ஒப்புந்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வங்கிகள் சந்தையில் இறங்குவதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.
விருப்பம் இல்லை..
இந்திய சந்தையில் பட்டியலிட துளியும் விருப்பம் இல்லை என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறந்த வரவேற்பு
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதால் அமெரிக்க சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என இந்நிறுவனம் நம்புகிறது.
நிறுவன துவக்கம்
உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் உயர் பதிவியில் இருந்து வெளியேறிய சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இணைந்து பெங்களுரில், 2007ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தைத் துவங்கினர்.
மதிப்பீடு
2007ஆம் ஆண்டு முதல் பல முதலீட்டாளர்களின் ( உள்ளாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களும் அடக்கம்) மூலம் இந்நிறுவனம் 2.5 பில்லியன் டாலர் வரை முதலீட்டு பெற்றதுள்ளது. மேலும் இந்திய சந்தை மதிப்பின் படி இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 12 பில்லியன் டாலர்.
செபி
சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்திய சந்தையில் துவக்க நிறுவனங்கள் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் அதிகளவிலான வரவேற்பு உள்ளதால் நிர்ணயம் செய்யப்பட்ட முதலீட்டை கண்டிப்பாக திரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்தது.
இதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் எந்த விதமான பதிலும் அனுப்பவில்லை.
அமெரிக்க சந்தை
அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 41 சதவீதம் டெக்னாலஜி நிறுவனங்கள்தான். இதில் இந்திய நிறுவனங்களின் அளவு 13 சதவீதம்.
இதன் மூலம் அமெரிக்காவில் இந்தியர்களுக்கும் சரி.. இந்திய நிறுவனங்களுக்கும் சரி.. சிறந்த வரவேற்பு உள்ளது தெளிவாக தெரிகிறது.
கோட்டைச்சாமி
அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அனைத்துமே இந்திய சந்தையிலும் பட்டியலிட்டவை தான். ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் மட்டுமே இந்திய பங்குச் சந்தையைப் புறக்கணிக்கிறது.
நிறுவனம் பதிவு செய்யப்பட்டது சிங்கப்பூரில், பிஸ்னஸ் செய்வது இந்தியாவில், பங்குச் சந்தையில் குதிப்பது அமெரிக்காவில். யாரை ஏமாற்ற இந்த திட்டம்...?
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications