மறைமுக வரி வசூல்.. இலக்கை விட ரூ.4,000 கோடி அதிகமாக வசூல் செய்த மத்திய அரசு!
டெல்லி: 2014-15ஆம் நிதியாண்டுக்கான மறைமுக வரி வசூல் இலக்கை மத்திய அரசு எட்டியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் 2015-16 நிதியாண்டுக்கான மறைமுக வரி வசூல் இலக்கை அதிகரித்தது. இதனால் இலக்கை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வருமான வரித்துறை அதிவேகமாக செயல்படுத்த துவங்கியது.
இதன் பயனாக இலக்கை விட ரூ.4,000 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது வருமான வரித்துறை.
2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு 5,42,325 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்திருந்தது. மார்ச் 31ஆம் தேதி முடிவில் அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட 4000 கோடி ரூபாய் அதிகமாக 5,46,479 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications