டெல்லி: உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழ்ந்த நோக்கிய நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலை மீது விதிக்கப்பட்ட விற்பனை தடையை நீக்க, வருமான வரித்துறை ரூ.3,500 கோடி நிதி உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
இதனால் சென்னை தொழிற்சாலையை விற்பதில் நோக்கியாவிற்கு மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.
மோடி உதவியை நாடிய நோக்கியா..
இதனிடையே நோக்கிய நிறுவனம் இப்பிரச்சனைகளில் இருந்து விடுப்படப் பிரதமர் அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி பேசுகையில், சென்னை நோக்கியா தொழிற்சாலை மீண்டும் இயங்க அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வருமான வரித் துறை
நோக்கியா நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை 3500 கோடி ரூபாய்க்கான நிதி உத்திரவாதத்தைக் கோரி டெல்லி உச்ச மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
21,153 கோடி வரி ஏய்ப்பு வழக்கு
இந்நிறுவனத்தின் சென்னை உற்பத்தி தொழிற்சாலையை விற்பதன் மூலம் நோக்கியா நிறுவனத்திற்குத் தமிழக அரசுக்கும் இடையேயான 21,153 கோடி வரி ஏய்ப்பு வழக்கு முடிவுக்கு வரும்.
மேலும் இத்தொழிற்சாலை விற்கப்படுவதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம் அனைத்து எஸ்குரோ கணக்கிற்கு மட்டுமே வரும் என நோக்கியா தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6
வருமான வரித்துறை தாக்கல் செய்யப்பட்ட மனு ஏப்ரல் 6ஆம் தேதி விசாரணைக்கு வருவதால் இருதரப்பினரும் கோர்ட்டில் ஆஜார் ஆக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications