மும்பை: நாட்டின் முன்னணி மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல், தங்களது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சில தளம் மற்றும் செயலிகளை (ஆப்ளிகேஷன்கள்) பயன்படுத்த கட்டணமில்லா இண்டர்நெட் சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ஏர்டெல் நிறுவனம் "ஏர்டெல் ஜீரோ" என பெயரிடப்பட்டுள்ளது.
என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
ஏர்டெல் ஜீரோ திட்டத்தின் கீழ் ஆப்ளிகேஷன், ஈ-காமர்ஸ் தளங்கள், விளையாட்டு (கேமிங்) தளங்கள் உட்பட வேறு சில முக்கிய இணையதள சேவைகளையும் இந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது.
இவனுங்க இவ்வளோ நல்லவனுங்களா..
இத்தகைய சேவை அளிக்க மொபைல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறாமல், இலவச சேவை அளிக்க விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து ஏர்டெல் பெற்றுக்கொள்ளும். இதுவும் ஒரு வகையான விளம்பரம் சேவை (டிஜிட்டல் விளம்பர சேவை) தான்.
100 அப்ளிகேஷன்
இத்திட்ட துவக்கத்தில் குறைந்தது 100 மொபைல் அப்ளிகேஷன் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்
ஏர்டெல் ஜீரோ சேவையை முதல்கட்டமாக ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு அளிக்க, இந்நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகள் செய்து வருகிறது.
டிஜிட்டல் மார்கெட்டிங்
இன்றைய நிலையில் டெக்னாலஜி நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த டிஜிட்டல் மார்கெட்டிங் தேர்வு செய்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் இத்தகைய சேவையின் மூலம் நிறுவனங்கள் டிஜிட்டல் மார்கெட்டிங்-காக செலவிடப்படும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பணம் சேமிக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
போட்டி
இந்தியாவில் இண்டர்நெட்.ஆர்க் சேவையின் மூலம் ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து நாட்டு மக்களுக்கு சில முக்கிய இணையதளங்களை இலவசமாக பயன்படுத்த விளைந்தள்ளது.
இக்கூட்டணிக்கு போட்டியாகவே ஏர்டெல் நிறுவனம் இத்தகைய சேவையை துவங்கியுள்ளது.
டிஜிட்டல் இந்திய
மேலும் இந்தியாவில் டிஜிட்டல் மார்கெட்டிங் துறை, வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் இண்டர்நெட் நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.


Click it and Unblock the Notifications