டெல்லி: நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹோண்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார்களின் விற்பனை 1,01,299 என்ற எண்ணிக்கையை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் இந்திய கிளைகளில் தயாரிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி கார்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன.

இதன் எதிரொலியாக கடந்த 15 மாதங்களில் சுமார் 1,01,299 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியுள்ளன..
இதுக்குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உயர் துணை தலைவரான ஜனனேஷ்வர் சென் கூறுகையில், "குறைந்த காலகட்டத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை செய்ததில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம்." என்றார்.
மேலும் இந்த விற்பனையில் 30 சதவீதம் பேர் முதல் முறை ஹோண்டா கார்களை வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா சிட்டி கார்கள் இந்தியாவில் 1998ஆம் ஆண்டு அறிமுகமாகின. கடந்த மூன்று தலைமுறையாக இந்நிறுவனம் சுமார் 4.3 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications