மும்பை: வட்டி வகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் நிதியியல் கொள்கையை இன்று வெளியிட்டார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். இதனால் வங்கிகள் நிர்வாகங்கள் கவலையில் உள்ளன.
2015-16ஆம் நிதியாண்டின் முதல் இருமாத நிதிக் கொள்கையை செவ்வாய்கிழமை ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்டார்.
வட்டிக் குறைப்பு
கடந்த 2 மாதத்தில் 2 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகித்ததை குறைத்தும் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. இதன் மூலம் வங்கிகள் அதிகளவிலான வருமானத்தை பெற்றன.
இந்நிலையில் நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கி ஆர்பிஐ வட்டி வகிதத்தை குறைக்கும் என வங்கிகள், தொழில்துறைகள் மற்றும் நிதியமைச்சகம் என அனைத்து தரப்பினரும் வட்டி வகித குறைப்பு எதிர்பார்த்தனர்.
ரெப்போ விகிதம்
ரகுராம் ராஜன் வெளியிட்ட நாணயக் கொள்கையில் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை எவ்வித மாற்றமும் இல்லாமல் 7.5 சதவீதமாக அறிவித்துள்ளார்.
சி.ஆர்.ஆர்
வங்கி தரப்புகள் ரெப்போ விகித குறைப்பை அதிகளவில் எதிர்பார்த்து பொய்த்துப்போன நிலையில், வங்கி இருப்பு விகிதமான சி.ஆர்.ஆர் விகிதத்திலும் எவ்வித மாற்றமும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
அடுத்த இரு மாதங்களுக்கு வங்கி இருப்பு விகிதம் 4 சதவீதம் தான்.
பணவீக்கம்
மார்ச் மாத முடிவில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 5.8 சதவீதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் 6 சதவீதமாகும் உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பெடர்ல் ரிசர்வ் வட்டி வகித உயர்வு
செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள இருமாத நாணயக் கொள்கை அமெரிக்க பெட்ரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு குறித்த கணிப்புகளுக்கு ஏற்றாவாறு அமைக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆர்பிஐ கடந்த 2 மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தாலும், வங்கிகள் எவ்விதமான வட்டி குறைப்பையும் அறிவிக்கவில்லை. இந்நிலையை மாற்றவே வட்டி குறைப்பு அறிவிக்கப்படவில்லை என தெளிவாக தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி
2015ஆம் நிதியாண்டின் நாட்டின் வளர்ச்சி புதிய கணக்கீட்டு முறையில் 7.8 சதவீதத்தை அடையும் எனவும் ராஜன் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications