டெல்லி: சீனாவில் மொபைல் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தை ஒரம்கட்டிய ஜியோமி, இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தையை விரிவாக்கம் செய்யத் தற்போது அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
ஆயுத எழுத்து..
இந்தியாவில் ஜியோமி நிறுவனம் நேரடி சந்தையில் இறங்காமல், ஆன்லைன் விற்பனையின் மூலம் தனது வர்த்தகத்தைப் பெருக்கி வருகிறது. இதற்குப் பிளிப்கார்ட் நிறுவனம் முழு உறுதுணையாக உள்ளது.
கடந்த ஒரு வருடமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து விற்பனை செய்து வந்த ஜியோமி தற்போது அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுடனும் இணைந்துள்ளது.
மனு ஜெயின்
இதுக்குறித்து ஜியோமி நிறுவனத்தின் தலைவரான மனு ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில், "இனி வாடிக்கையாளர் பிளிப்கார்ட் மட்டும் அல்லாமல் அமெசான், ஸ்னாப்டீல் விற்பனை தளங்கள் மற்றும் தி மொபைல் ஸ்டோர், ஏர்டெல் இந்தியா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளிலும் ஜியோமி தயாரிப்புகளைப் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
5 வருடம்
ஜியோமி நிறுவனம் இந்தியாவில் துவங்கி 5 வருடங்கள் நிறைவடைந்ததைச் சிறப்பிக்கும் வகையில் எம்ஐ 4 ரக மொபைல்களை 2,000 ரூபாய் தள்ளுபடி விலையில் விற்கிறது. அதுமட்டும் அல்லாமல் மேலும் சில சிறப்புச் சலுகைகளையும் வழங்கி வருகிறது.
சந்தை மதிப்பு
டிசம்பர் மாத முடிவில் இந்நிறுவனம் 1 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததன் மூலம் சந்தை மதிப்பு 3-4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விற்பனை கிளைகள்
இந்நிறுவனம் தி மொபைல் ஸ்டோர் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து நேரடி சந்தை விற்பனையில் இறங்கியுள்ளது. இந்த இணைப்பின் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 133 கடைகளில் ஜியோமி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications