பெங்களுரூ: இந்திய ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல், மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தை 500 மில்லியின் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
இதுக்குறித்து இரு நிறுவனங்களும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தகவல்களை வெள்ளியிட்டுள்ளன.
ஸ்னாப்டீல்
இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க ஸ்னாப்டீல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நிறுவன வளர்ச்சிக்கு தேவையான 5 - 6 நிறுவனங்களைக் கைபற்ற திட்டமிட்டுள்ளது ஸ்னாப்டீல்.
மொபைல் ஈகாமர்ஸ்
ஃப்ரீசார்ஜ் இணைப்பின் மூலம் ஸ்னாப்டீல் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் ஈகாமர்ஸ் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
குனால் பஹல்
இதுக்குறித்து ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைவரான குனால் பஹல் தனது டிவிட்டர் பக்கத்தில், ஸ்னாப்டீல் குடும்பத்திற்குள் ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தை அன்புடன் வரவேற்கிறோம் எனத் தெரிவித்தார்.
ஃப்ரீசார்ஜ்
இந்நிறுவனம் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் மொபைல் ஷாப்பிங் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்தது இந்நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications