டெல்லி: இந்தியாவில் ஒலா மற்றும் உபெர் கேப்ஸ் நிறுவனங்களின் மொபைல் அப்ளிகேஷன்ஸ் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட உள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை இந்தியா ழுழுவதும் தடையில்லாமல் செயல்படுத்த முடியும்.
டெல்லி, மும்பை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் ஒலா மற்றும் உபெர் கேப்ஸ் நிறுவனங்களின் மொபைல் அப்ளிகேஷன்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடைவிதித்திருந்தது. இதனால் இந்நிறுவனத்தின் சேவை இப்பகுதிகளில் முடங்கியது.
நித்தின் கட்கரி
போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி அடுத்த 3 வாரத்தில் இந்நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன்ஸ் மீதான தடைகள் நீக்கப்படுவதற்கு முன்பு இந்நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே தடைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
தடை செய்யவது அர்த்தமற்றது
நிறுவன சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், மாறியமைக்க நிறுவனங்களுக்குக் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும், இதைத் தவிர்த்து சேவைகளைத் தடை செய்வது சரியான முறையல்ல என்று கட்கரி தெரிவித்தார்.
உபெர் மற்றும் ஓலா
டெல்லி மற்றும் மும்பை அடுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் உபெர் மற்றும் ஓலா நிறுவன சேவைகளைத் தடை செய்யத் துவங்கியுள்ளனர்.
இதனைத் தடுக்கும் வகையில் இரு நிறுவனங்களின் தலைவர்கள் போக்குவரத்து அமைச்சர் மற்றும் இத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர்.
நிபந்தனைகள்
இச்சந்திப்பில் இருநிறுவனங்களுக்கும் போக்குவரத்துத் துறை சில நிபந்தனைகள் விதித்தது இதனால் உபெர் மற்றும் ஓலா கேப்ஸ் நிறுவனங்களுக்குக் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் உருவாகியது.
3 வாரங்கள்
அடுத்த 3 வாரங்களில் இரு நிறுவனங்களின் நிலைப்பாடு தெரிய வரும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications