சர்வதேச நாடுகளுக்கு இணையாக இந்திய விமானத் துறையின் தரம் உயர்ந்தது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய விமானத்துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சிக்கு ஏற்ப சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அமெரிக்கப் பெடரல் ஏவியேஷன் அசோசியோஷன் (FAA) அமைப்பு இந்திய விமானத் துறையின் பாதுகாப்பு மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்தை ஆய்வு செய்ததில், இந்திய விமானத் துறைக்குத் தரம் 1 என்ற அங்கீகாரத்தை அளித்தது.

அசோக் கஜபதி ராஜூ

அசோக் கஜபதி ராஜூ

இதற்கான அறிவிப்பை புதன்கிழமை அமெரிக்கப் போக்குவரத்து செயலாளர் அந்தோணி பாக்ஸ் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோ கஜபதி ராஜூ அவர்களைச் சந்திக்கும்போது தெரிவித்தார்.

ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ்

ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ்

இந்தியாவில் புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச நாடுகளின் இணைப்புடன் துவங்கப்பட்டதால் சிறந்த தரத்துடன் விளங்குகின்றன.

ஆனால் ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் கடந்த சில வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளன என்று அந்தோணி பாக்ஸ் குறிப்பிட்டார்.

 

சர்வதேச தரம்

சர்வதேச தரம்

செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி பாக்ஸ், இந்திய விமானத் துறை தற்போது சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு (ICAO) வடிவமைத்த அனைத்து நிபந்தனைகளையும் பெற்று சர்வதேச நாடுகளுக்கு இணையாக உயர்ந்துள்ளது.

முதலீடு

முதலீடு

இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஏற்கனவே பல பன்னாட்டு விமான நிறுவனங்கள் வரிசையில் நிற்கும் நிலையில், இத்தர உயர்வு இந்திய சந்தைக்கும் வலிமை சேர்க்கும் வகையில் அமைகிறது.

புதிய விமான நிறுவனங்கள்

புதிய விமான நிறுவனங்கள்

இந்திய வானில் பயணிகள் விமானச் சேவை அளிக்கப் பல நிறுவன இத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளித்துள்ள நிலையில், கடந்த வாரம் ஏர் பிகாசஸ் நிறுவனம் உள்நாட்டு விமானச் சேவையைத் துவங்கியது.

சரக்கு விமானச் சேவையில் இந்தியா சந்தை பன்தங்கி இருந்தாலும், அடுத்து சில வருடங்களில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் இப்பிரிவு வளர்ச்சி பாதையில் செல்லும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

U.S. FAA upgrades India's aviation safety rating

In a major boost to the Indian civil aviation sector, more specifically for Air India and Jet Airways, the U.S. Federal Aviation Association (FAA) has upgraded the safety rating of Indian airlines as well as of the civil aviation regulator by granting a Category 1 rating.
Story first published: Thursday, April 9, 2015, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X