டெல்லி: மார்ச் மாத முடிவில் இந்தியாவில் உள்நாட்டு கார் விற்பனை சுமார் 2.64 சதவீதம் அதிகரித்துள்ளது.
2014ஆம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் சுமார் 1,76,011 கார்கள் விற்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இதன் எண்ணிக்கை 1,71,491ஆக உள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் இருசக்கர வாகனங்களின் விற்பனை 5.22 சதவீதம் குறைந்துள்ளதாக இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வர்த்தக வாரகன விற்பனை 0.15 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
வருடாந்திர அடிப்பிடையில் உள்நாட்டு கார் விற்பனை 4.99% உயர்வும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 8.09% உயர்வும், வர்த்தக வாகனகள் விற்பனை 2.83% உயர்வை சந்தித்துள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் மொத்த வாகன உற்பத்தியில் சுமார் 7.22 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications