பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையும் 'டப்பாவாலாஸ்'!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: உலகளவில் புகழ் பெற்ற டப்பாவாலாஸ், பிளிப்காரட் நிறுவனத்தின் டெலிவரி துறையில் இணைய உள்ளது.

 

நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், மும்பையில் தனது டெலிவரி பிரிவை மேம்படுத்தவும், கடைசி நேர டெலிவரிகளை எளிதாக்க டப்பாவாலா உடன் இணைய உள்ளது.

டப்பாவாலாஸ்

டப்பாவாலாஸ்

மும்பையில் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என அனைத்து பணியாளர்களுக்கு அவர்களின் வீட்டில் இருந்து நேரடியாக உணவுகளைச் சேர்க்கும் பணியை டப்பாவாலா-க்கள் பல ஆண்டுகளாகச் செய்துவருகினறனர்.

பிளானிங்

பிளானிங்

இதைக் குறிப்பிட ஒரு முறையைக் கொண்டு இவர்கள் செய்து வருகினறனர். ஒரு நாளில் 50,000 டப்பாக்கள் வரை இவர்கள் பணியாளர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றனர்.

இவர்களின் முறையை ஆய்வு செய்த பல பன்னாட்டு மேலான்மை கல்வி நிறுவனங்கள், ஒரு நாள் டெலிவரியில் 2 முதல் 5 தவறுகள் மட்டுமே நடக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

120 வருடம்

120 வருடம்

இந்த டப்பாவாலாக்கள் இந்தியாவில் சுமார் 120 வருடம் எந்தவிதமான பேப்பர், மேலான்மை குழு இல்லாமல் குறைவான கட்டண திட்டத்துடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

பிளிப்கார்ட்
 

பிளிப்கார்ட்

இந்த முறையைப் பிளிப்கார்ட் நிறுவனம் தனது டெலிவரி பிரிவில் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகப் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும் எனப் பிளிப்கார்ட் நம்புகிறது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ள பிற நிறுவனங்களான ஸ்னாப்டீல், அமேசான் நிறுவனங்களும் இவர்களின் சேவையைப் பெற முயற்சி செய்யும்.

செயல்பாடு

செயல்பாடு

இந்த டப்பாவாலாக்கள் முதலில் பிளிப்கார்ட் கிடங்குகளில் பொருட்களைப் பெற்று தங்களது டப்பாக்களை அளிக்கும் இடங்களில் பிளிப்கார்ட் பொருட்களையும் டெலிவரி செய்யும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

முதல் கட்டமாக இவர்களுக்குப் பேப்பரில் தகவல்கள் கொண்டு பொருட்களை அளிக்கப்படுவதாகவும், அதன் பின் ஆப் மற்றும் கேஜெட்களைப் பயன்படுத்த டப்பாவாலாக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் எனவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

டாப் 10 செய்திகள்

டாப் 10 செய்திகள்

இந்த வார டாப் 10 செய்திகளை தெரிந்துக்கொள்ள இதை கிளீக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now Mumbai's famed dabbawalas will deliver your Flipkart buys

Tapping on the country's renowned supply chain, online marketplace Flipkart today said it has tied-up with the 'Dabbawalas' of Mumbai to ensure last mile delivery to consumers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X