டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு வருகிற மே 1ஆம் தேதி முதல், ரோமிங் கட்டணத்தை 23 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இதன் மூலம் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன் அடைவார்கள் என டிராய் அமைப்புத் தெரிவிக்கிறது.
எஸ்எம்எஸ் கட்டணம்
ரோமிங் கட்டணத்தை 23% குறைத்த டிராய் அமைப்பு எஸ்எம்எஸ் கட்டணத்தையும் 75% குறைத்துள்ளது. இதனால் தொலைதொடர்பு ஆணையத்தின் எஸ்எம்எஸ் நிலை கட்டணமான (Base rate) 1 ரூபாயில் இருந்து 25 பைசாவாகக் குறைத்துள்ளது.
நிபந்தனை
இக்கட்டணங்கள் அனைத்தும் ரோமிங்கில் இருக்கும் போது மட்டுமே அமையும். ஆதாவது நீங்கள் தமிழ்நாட்டு வாடிக்கையாளராக இருந்தால், கர்நாடாக மாநிலம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து கால் அல்லது எஸ்எம்எஸ் செய்யும்போது இக்கட்டணங்கள் பொருந்தும்.
தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கால் செய்யும்போது சாதாரணக் கட்டணம் மட்டுமே பொருந்தும்.
கட்டண குறைப்பு
டீராய் அமைப்பு அறிவித்த நிலை கட்டணத்தை ஒப்பிடுகையில் மொபைல் சேவை நிறுவனங்கள் கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும்.
இந்நிலையில் கட்டண குறைப்பிற்குப் பின் ரோமிங் கால் கட்டணம் நிமிடத்திற்கு 1.15 ரூபாயாகவும், எஸ்எம்எஸ் கட்டணம் 38 பைசாவாகக் குறையும்.
லோக்கல் கால் கட்டணம்
தற்போதும் உள்ளுர் தொலைதொடர்பு கட்டணத்தின் உச்சவரம்பான 1 ரூபாயில் இருந்து 80 பைசாவாக டிராய் அமைப்பு குறைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய அளவில் நன்மை அடைவார்கள் என டிராய் தெரிவித்துள்ளது
மே 1
உழைப்பாளர்கள் தினமான மே 1ஆம் தேதி இக்கட்டண குறைப்பு அமலுக்கு வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications