ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி- சாம்சங் சக்களத்திச் சண்டை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: சீன மொபைல் தயாரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமான ஜியோமி 12 மணிநேரத்தில் 21.1 லட்ச மொபைல்களை விற்று உலகச் சாதணை படைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் 5 ஆண்டு நிறைவு நாளை சிறப்பிக்கும் வகையில் ஜியோமி தனது தயாரிப்புகளுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்திருந்தது.

சக்களத்தி சண்டை

சக்களத்தி சண்டை

இந்த விற்பனை துவங்கி 24 மணிநேரத்தில் சுமார் 21.1 லட்ச மொபைல் போன்களை விற்று இந்நிறுவனம் உலகச் சாதனை படைத்துள்ளது. இதனால் மொபைல் போன்களை விற்பனை செய்யத் தவித்துவரும் சாம்சங் நிறுவனம் கடுப்பாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் நிலை அடுத்த 5 வருடங்களுக்குத் தொடர்ந்தால், நோக்கிய போன்று கடையை மூட வேண்டிய நிலை உருவாகும்.

 

12 மணிநேர வருவாய்

12 மணிநேர வருவாய்

இந்நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடியில் மொபைல் மற்றும் பிற பொருட்களின் விற்பனையின் மூலம் ஜியோமி நிறுவனத்திற்குச் சுமார் 2.08 பில்லியன் வான் ஆதாவது, 335 மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.

அலிபாபா நிறுவனம்

அலிபாபா நிறுவனம்

இதற்கு முன் அலிபாபாவின் டிமால்-இல் ஒரே நாளில் 1.89 மில்லியன் ஆதாவது 18.9 லட்சம் போன்களை விற்றது தான் உலகச் சாதணையாக இருந்தது.

டிவிட்டர்

டிவிட்டர்

ஜியோமி நிறுவனத்தின் இப்புதிய சாதனைக் குறித்துக் கின்னஸ் வேல்டு ரெக்கார்ட் நிறுவனத்தின் இணையான சீனா வெய்போ நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் இந்நிறுவனத்தின் தலைவர் லீ ஜுன் தெரிவித்தார்.

"24 மணிநேரத்தில் 2.11 மில்லியன் மொபைல் போன்களை விற்று ஜியோமி புதிய உலகச் சாதனை படைத்துள்ளது." எனத் தெரிவித்திருந்தார்.

 

2014ஆம் ஆண்டு

2014ஆம் ஆண்டு

கடந்த நிதியாண்டில் ஜியோமி சுமாப் 61 மில்லியன் மொபைல்களை விற்று 74.3 பில்லியன் வான் வருவாய் ஈட்டியது.

இதன் மூலம் உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையல3வது இடத்தையும், சீனாவில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது.

 

நிறுவன மதிப்பு

நிறுவன மதிப்பு

இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 45 பில்லியன் டாலராகும். உலகளவில் ஈகாமர்ஸ் சந்தையில் கொடிகட்டி பறக்கும் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஜியோமி நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளராக உள்ளார்.

நோக்கியா டூ சாம்சங் வரை

நோக்கியா டூ சாம்சங் வரை

ஒரு காலத்தில் மொபைல் போன் விற்பனை மற்றும் வடிவமைப்பில் நோக்கியா மன்னனாகத் திகழ்ந்தது. தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிளின் ஐஓஎஸ்-களுடன் போட்டிப்போட முடியாமல் முடங்கிப் போனது.

இதன் வரிசையில் தற்போது சாம்சங் வருகிறது. இதைப் பற்றிப் படிக்கக் கிளீக் செய்யவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi sells 2.11 mn phones in 12 hrs; sets Guinness record

China’s smartphone giant Xiaomi today said it has set a new Guinness World Record for mobile phone sales by selling 2.11 million handsets in a 12-hour flash sale held to celebrate its fifth anniversary.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X