டெல்லி: உலகளவில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம்,இந்திய சந்தையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், முதலீட்டை அதிக்கரிக்கத்திட்டமிட்டுள்ளது.
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜான் ரெனால்ட்ஸ், தொலைதொடர்பு மற்றும் ஐடி துறைஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
விற்பனை
இந்நிறுவன தயாரிப்புகள் இந்திய சந்தையில் 3 மடங்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில்,இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தக வரிவாக்கம் செய்ய ஆப்பிள் நிறுவனம் அனைத்துவகையான நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.
சந்திப்பு
இந்திய சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க இந்நிறுவனத்தின் ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா,ஆப்பிரிக்கா பிராந்திய தலைவர் ஜான் ரெனால்ட்ஸ், இந்திய தொலைதொடர்பு மற்றும் ஐடித்துறைஅமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்களைச் சந்தித்தார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D)
இச்சந்திப்பில் ரவி சங்கர் ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை இந்திய சந்தையில் மொபைல் மற்றும்டெலிக்காம் துறையில் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கும்படி வலியுறுத்தினார். இதுக்குறித்து விரையில்தங்களது முடிவுகளைத் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களை அதிகளவில் உருவாக்க மேக் இன்இந்தியா திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஆஸ்தான உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான்-ஐஇந்தியாவில் முழுமையாகச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
மொபைல் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் 100 கோடிக்கு மேற்பட்ட மொபைல்வாடிக்கையாளர்கள் உள்ளனர், அதேபோல் 300மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமான இண்டர்நெட் பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications