பெங்களூரு: மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா பெங்களூரூ முதல் புதுச்சேரி வரையிலான புதிய விமானச் சேவையைச் செவ்வாய்கிழமை (இன்று) துவங்கியுள்ளது.
வாரத்தில் புதன்கிழமையைத் தவிர 6 நாட்களுக்குத் தினசரி விமானச் சேவையை அளிக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

ஏர்இந்தியா விமானம் பெங்களூரில் இருந்து 15.35 மணிக்கு புறப்பட்டு 1 மணிநேர பயணத்திற்குப் பிறகு புதுச்சேரியில் தரையிறங்கும். இதன் பின் 16.55 மணிக்குப் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 17.55 மணிக்கு பெங்களூரை அடையும்.
இச்சேவையின் மூலம் புதிய பயணிகளை ஏர் இந்தியா பெறும் என நம்புகிறது. இந்த வழித்தடத்தில் சாலை போக்குவரத்து மட்டுமே அதிகளவில் இருந்து வந்த நிலையில், இந்த நீண்ட பயணத்தை மக்களுக்கு எளிதாக்க ஏர் இந்தியாவின் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்.
ஏர் இந்தியா துவக்க சேவையாக ஏடிஆர் விமானத்தை இந்த வழிதடத்தில் இயக்குவதாகத் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் பகுதியில் இருந்து பெங்களூரூக்கு வரும் பயணிகளும் இதன் அதிகப் பயன் அடைவார்கள் என் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications