சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் சூப்பர் பைக் மற்றும் சூப்பர் கார்களுக்கு மக்களிடம் ஏக மவுசு. இதன் எதிரொலியாகத்தான் இந்தியாவில் சூப்பர்பைக் விற்பனை 50 சதவீதம்உயர்ந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் பெருமை மிகு தயாரிப்பான புல்லட் விற்பனையில் கலக்கி வருகிறது.
சூப்பர்பைக் விற்பனை
இந்தியாவில் 2008-09ஆம் ஆண்டுக் காலத்தில் சூப்பர்பைக் விற்பனை 450 என்ற எண்ணிக்கையில் இருந்து 3,500 ஆக (2013-14ஆம் ஆண்டுகளில்) உயர்ந்துள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் இதன் விற்பனை அளவு 9,500 ஆக உயரும் எனவும் 2020 ஆண்டில் குறைந்தது 20,000 என்றஎண்ணிக்கையை எட்டும் என டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விமல் சம்பிளி தெரிவித்தார்.
பைக் சந்தை
இந்தியாவில் 500 சிசி-க்கும் அதிகமானப் பைக்குகளைச் சூப்பர் பைக் ரகத்தில் சேர்க்கப்படுகின்றன. இச்சந்தையில் ராயல்என்பீல்ட் மற்றும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விற்பனை ஒவ்வொரு வருடமும் 40 முதல் 50 சதவீதம் உயர்வைச் சந்தித்து வருகிறது.
60-65 சதவீத சந்தையை இவ்விரு நிறுவனங்கள் பெற்றுள்ளது எனச் சந்தை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
பிற நிறுவனங்கள்
டிரையம்ப், யாமஹா, ஹோண்டா, கவாசாகி, சுசூகி, மற்றும் டிஎஸ்கே மோட்டார் வீல்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வைச் சந்தித்து வருகிறது.
ஆதிக்கம்
இந்தியச் சந்தையைப் பொருத்த வரை ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் சூப்பர்பைக் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்திய சந்தைக்குள் புதிதாக நுழைந்த டுக்காட்டி மற்றும் பெனிலி ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவில்உயர்வைச் சந்தித்து வருகிறது.
அதிகப்படியான விலை
இந்தியாவில் ஆடம்பர கார் விற்பனையை ஒப்பிடுகையில் சூப்பர் பைக் விற்பனை மிகவும் குறைவே. இதற்கு முக்கியக் காரணம், சூப்பர் பைக்கின் விலை, துவக்க நிலை ஆடம்பர கார்களின் விலைக்கு இணையாக உள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கார்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications