மும்பை: நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.
இதனால் வீட்டுக்கடன் வழங்குவதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கும், ஐசிஐசிஐ வங்கிகளுக்கும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.
வட்டிக் குறைப்பு
ஐசிஐசிஐ வங்கி அறிவித்த வட்டிக் குறைப்பின் மூலம் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு 9.85 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 9.9 சதவீதத்தில் வீட்டுக் கடன் அளிக்க இவ்வங்கி முடிவு செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் நிலை வட்டி விகிதம் (Base rate) 9.75 சதவீதம்.
நிலை வட்டி விகிதம்
பேஸ் ரேட் என்பது ஒரு வங்கி ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்படும் தொகைக்கான வட்டி வகிதம். இதை அடிப்படையாக கொண்டே வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவிலான வித்தியாசத்துடன் கடன் அளிக்கிறது.
10 வருட கடன்
இந்த வட்டிக் குறைப்புக்கான அறிக்கை வெளியிடும் போது ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய கடனுக்கு 9.9 சதவீத நிலையான வட்டி வகிதத்தில் 10 வருட கடன் அளிக்க உள்ளதாக தெரிவித்தது.
ஏபர்ல் 10
இந்த வட்டிக்குறை ஏப்ரல் 10 ஆம் தேதி முதலே அமல்படுத்தப்படும் என இவ்வங்கி தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட தேதியில் கடன் பெற்றவர்களுக்கும் இந்த வட்டி விகிதம் பொருந்தும் என்பது பொருள்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
ஞாயிற்றுக்கிழமை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து பெண்களுக்கு 8.85 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 8.9 சதவீதத்தில் வீட்டுக் கடன் அளிக்க உள்ளதாக தெரிவித்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications