டெல்லி: நுகர்வோர் விலை குறியீட்டின்(CPI) படி மார்ச் மாத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.71 சதவீதமாகக்குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ விகித்ததை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததால், நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைய மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
பணவீக்கம்
பிப்ரவரி மாத பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் மார்ச் மாதம் சில்லறை பணவீக்கம் 0.20 சதவீதம் குறைவாகும், அதேபோல் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இதன் அளவு 8.25 சதவீதமாக உள்ளது.
உணவு பணவீக்கம்
மார்ச் மாதத்தில் உணவு பணவீக்கம் 6.88 சதவீதத்தில் இருந்து 6.14 சதவீதமாகக் குறைந்துள்ளது. நுகர்வோர் விலைகுறியீட்டில் 50 % உணவு பணவீக்கம் உள்ளதால், சில்லறை பணவீக்கத்தில் அதிகளவிலான சரிவு காணப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
ஆர்பிஐ சமீபத்தில் வெளியிட்ட இரு மாத நாணய கொள்கையில், சில்லறை பணவீக்கம் ஜனவரி 2016ஆம் ஆண்டில் 6சதவீதத்தை எட்டும் முன் 2015ஆம் ஆண்டில் 4 சதவீதத்தை எட்டும் எனத் தனது கணிப்புகளைக் குறிப்பிட்டுள்ளது.
வளர்ச்சி
சில்லறை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவு நாட்டின் பொருளாதாரா வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக அமையும் என டெலாய்ட் இந்திய கிளையின் உயர் தலைவர் அனிஸ் சக்கரவர்த்தி மற்றும் சிஐஐ தலைவர் சந்திரஜித் பனர்ஜி ஆகியோர்தெரிவித்தனர்.
4 சதவீத சரிவு
ரிசர்வ் வங்கியின் கணிப்புகளின் பிடி அடுத்தச் சில மாதங்களில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்தை அடையும்என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகித குறைப்பு
கடந்த 4 நான்கு நாட்களில் இந்தியாவின் முன்னணி வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தைக் குறைத்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரிக்கக் கூடும். இதனால் பணவீக்கம் அதிகளவில் குறையவும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications