டெல்லி: இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம், இணையச் சமநிலை (Net Neutrality) பற்றி முக்கிய விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாத முடிவில் 2.90 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் கொண்டு நாட்டின்மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஏட்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனம் (2.35 மில்லியன்வாடிக்கையாளர்கள்), வோடாபோன் இந்தியா (1.36 மில்லியன் வாடிக்கையாளர்கள்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப்பிடித்துள்ளதாகச் செல்லுலார் ஆப்ரேட்டார்கள் அமைப்பு (COAI) தெரிவித்துள்ளது.
மார்ச் மாத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர்களுடன் சேர்த்து மொத்தமாக 226.02 மில்லியன்மொபைல் வாடிக்கையாளர்களைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் அளவு 1.17 சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் இந்தியாவின் மொத்த மொபைல் சேவை பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 705.20 மில்லியனாக உள்ளது.


Click it and Unblock the Notifications