டெல்லி: இந்திய ஐடி துறையில் புதிதாக வேலைக்கும் சேரும் பணியாளர்களுக்கு, இந்த வருடமும் சம்பளம் உயர்த்தப்படாது என நாட்டின் முன்னணி ஐடி நிறுவனத்தின் மனித வளப்பிரிவு அதிராகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 வருடங்களில் ஐடித்துறையின் மோகம் மக்கள் மத்தியில் அதிகளவில் பரவியுள்ள காரணத்தினால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேஷன் டெக்னாலஜி படித்தவர்கள் எல்லாம் தற்போது ஐடி துறையில் பணியாற்றுகின்றனர்.
நிறுவனத்தின் பதில்...
இந்திய ஐடி நிறுவனங்களில் ஆட்டோமேஷன், இரண்டு இலக்க செலவீண குறைப்பு மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு போன்ற காரணங்களால் கடந்த 7 வருடமாகப் புதிதாக வேலைக்கும் சேரும் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது.
பெரு நிறுவனங்கள்
நாட்டின் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், சிடிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் போன்ற நிறுனங்களிலும் இதே நிலைதான்.
பிரஷ்ஷர்களுக்கு 7 வருடமாகக் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே இந்த நிறுவனங்கள் வழங்கி வருகிறது.
சம்பளம்
2007-08ஆம் ஆண்டுக் காலத்தில் ஐடித்துறையில் சேர்ந்தவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள், வருடத்திற்கு 2.75 லட்சம் ரூபாய் சம்பளம் அளித்தனர், 7 வருடங்களுக்குப் பிறகு இதன் அளவு 3-3.5 இலட்சம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது.
பணவீக்கம்
இந்த 7 வருட காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 40-45 சதவீதம் வரை உயர்ந்ததுள்ளது. பணவீக்கம் உயர்ந்தால் நாட்டின் விலைவாசியும் உயரும்.
மாணவர்கள்
வருடத்திற்கு இந்தியாவில் 1.5 மில்லியன் அதாவது 15 லட்சம் இன்ஜினியர் மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர். அவர்களில் 2,00,000 மாணவர்களுக்கு மட்டுமே இத்துறையில் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது.
மீதமுள்ள பெருவாரியான மாணவர்களும் இத்துறையில் சேர விரும்புவதால் தான் இத்தகைய நிலை என ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் கூறுகிறது.
ஆட்கள் பற்றாக்குறை = சம்பள உயர்வு
தேவைக்கு ஆட்கள் குறைவாக இருக்கும்போது தான் சம்பளம் உயரும். தேவையே இல்லாமல் நிறுவனங்கள் ஆட்களைச் சேர்த்துக்கொண்டால் இது தான் விளைவு.
துவக்க நிறுவனங்கள்
இத்துறையில் துவக்க நிறுவனங்கள் (Startup companies) இலட்ச கணக்கில் துவங்கப்பட்ட உள்ளது. இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைக் கேட்டால் கண்களில் தண்ணீர் தான் வரும்.
கிளிப்பிள்ளை
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications