டெல்லி: மார்ச் மாத்தில் இந்தியாவில் ஐடி மற்றும் வங்கித்துறையில் அதிகளவிலான ஆட்சேர்ப்பு நடைபெற்றதால்,நிறுவனங்களில் ஆட்சேப்பு நடவடிக்கை 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக நௌக்ரி.காம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி வேலைத்தேடுதல் தளமான நௌக்ரியின் ஜாப் ஸ்பீக் இன்டக்ஸ் குறியீடு மார்ச் மாத்தில் 1,609 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 9 சதவீதம் அதிகமாகும்.
ஜாப் ஸ்பீக் இன்டக்ஸ்
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் அடுத்தச் சில மாதங்களுக்கு ஜாப் ஸ்பீக் இன்டக்ஸ் குறியீடு அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புள்ளதாக நௌக்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்
2015-16ஆம் நிதியாண்டில் வேலை தேடுபவர்களுக்குத் துறைவாரியாகவும், நகரவாரியாகவும் அதிகளவிலான வாய்ப்புகள்உருவாக உள்ளது என இந்த தளத்தின் நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர் மற்றும் தலைமை விற்பனை அதிகாரியான வி.சுரேஷ் தெரிவித்தார்.
முக்கியத் துறைகள்
வங்கியியல், நிதிச் சேவைகள், கணக்கு மற்றும் பைனான்ஸ் துறையில் இந்த வருடம் அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.
ஐடித்துறை
ஐடி மற்றும் கன்சல்டிங் துறையில் 2015ஆம் ஆண்டில் 31 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014ஆம்ஆண்டு இதன் வளர்ச்சி 27 சதவீதமாக இருந்தது.
3வது இடத்தில் சென்னை
நகரவாரியாகப் பார்க்கும்போது புனேவில் அதிகளவிலான நிறுவனங்கள் பணியாளர்களைப் பணியிடங்களில் நியமித்துள்ளது. புனேவை தொடர்ந்து டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


Click it and Unblock the Notifications