பெங்களூரு: விஷால் சிக்கா தலைமையில் இன்போசிஸ் நிறுவனம் புதிய பரிமாணத்தில் வளர துவங்கியுள்ள நிலையில், நிர்வாகம் திறமையானவர்களைத் தேடித்தேடி நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு வருகிறது.
இதன் படி டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவர் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அசிஷ் கோயல் இன்போசிஸ் நிறுவனத்தின் விஞ்ஞான ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
விஷால் சிக்கா
இந்நிறுவனத்தின் சிஇஒ-வாகப் பதவியேற்றிய நாள் முதல், இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்காக மட்டும் அல்லாமல் அடுத்தத் தலைமுறை நிறுவனமாக மாற்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் திறமைசாலிகளை நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு வருகிறார் விஷால் சிக்கா.
அசிஷ் கோயல்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பகுதி நேர வேலையாக மட்டுமே இணைந்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர் இன்போசிஸ்-இல் குறைந்தது 2 வருடமாவது பணியாற்ற உறுதிக்கொண்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
டிவிட்டரில் அசிஷ்
அசிஷ் கோயல் டிவிட்டர் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகவும் ஆராய்ச்சிப் பணியாளராகவும் சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்நிறுவனத்தில் மிகவும் கடினமான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார் அசிஷ் கோயல்.
சிலிக்கான் வேலி
சிக்கா தலைமையில் இன்போசிஸ் நிறுவனத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் இருந்து பலர் இணைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கின்றது. இதில் அசிஷ் கோயல் மிக முக்கியமானவர் என இன்போசிஸ் கூறுகிறது.
அமேசான், பிளிப்கார்ட்
சில மாதங்களுக்கு முன் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களும் இவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளது குறிப்பிடத்தக்கத்து.


Click it and Unblock the Notifications