பெங்களூரில் பிரம்மாண்டமான அலுவலகம் திறந்த மோர்கன் ஸ்டான்லி

பெங்களூரு: அமெரிக்கப் பங்குச்சந்தை முதலீடு மற்றும் நிதிச்சேவை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், உலக நாடுகளில் இருக்கும் கிளைகளுக்கு இந்தியாவில் இருந்துதொழில்நுட்ப சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காகப் புதிய பணியாளர்கள், புதிய செயல்திட்டங்களை இந்நிறுவனம் தீட்டியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகப் பெங்களூரில் 1,400 பணியாளர்கள் ஒன்றாக ஓரே இடத்தில் பணிபுரியும் வகையில் உலக வர்த்தகத்திற்கு உதவும் வகையில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

புதிய அலுவலகம்

புதிய அலுவலகம்

இந்த அலுவலகத்தின் மூலம் உலக நாடுகளில் இருக்கும் இதன் கிளைகளுக்கு மும்பை அலுவலகத்துடன் இணைந்துசேவை அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய அலுவலகத்திற்கான முதலீட்டுத் தகவல்களை இந்நிறுவனம் அறிவிக்கவில்லை.

 

பெங்களூரு

பெங்களூரு

உலக நாடுகளில் இருக்கும் கிளைகளுக்குத் தொழில்நுட்ப சேவை அளிக்க இந்திய சிறந்த இடமாகத் தேர்வுசெய்யத்தத்தோடு மட்டும் அல்லாமல், சிறந்த சேவை அளிக்க அதிகப் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக்கொண்ட பெங்களூரு நகரத்தை தேர்வு செய்தோம் என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ரோசன்தல்தெரிவித்தார்.

மும்பையில் மோர்கன் ஸ்டான்லி

மும்பையில் மோர்கன் ஸ்டான்லி

இந்தியாவில் இந்நிறுவனம் 500 பணியாளர்களுடன் 1.84 இலட்ச சதுரடி அலுவலகத்தில் தனது சேவையைத் துவக்கியது.

தற்போது மும்பை அலுவலகத்தில் மட்டும் 2,400 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

சேவைகள்

சேவைகள்

இந்தியாவில் இருந்து இந்நிறுவனத்தின் கிளைகளுக்குத் தொழில்நுட்பம், ஆப்ரேஷன்ஸ், பைனான்ஸ், ஃபண்ட் சர்வீஸ்மற்றும் பிற நிதியியல் சேவைகளையும் அளித்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+