டெல்லி: நோக்கியா - அல்காடெல் லூசன்ட் நிறுவன இணைப்பால் இந்திய கிளையில் மார்கெட்டிங், விற்பனை, ஆராய்ச்சி மற்றும் சாப்ட்வேர் பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான திகழ்ந்த நோக்கியா, போட்டியின் காரணமாகத் தனது மொபைல் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றது.
இதன் பின் தனது டெலிகாம் உபகரணச் சந்தையை வலிமைப்படுத்த 16.58 பில்லியன் டாலருக்குப் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த அல்காடெல் லூசன்ட் நிறுவனத்தை நோக்கியா கைப்பற்றியது.
மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு
நிறுவனங்களின் இணைப்பின் மூலம் இந்திய கிளையில் வையர்லெஸ் இன்பராஸ்டக்சர் பிஸ்னஸ் பிரிவில் பணியாற்றும்பணியாளர்கள் நீக்கப்படலாம் என ஒருவர் தெரிவித்தார்.
மற்றொருவர் சேல்ஸ் பிரிவில் அதிகளவிலான பணிநீக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
ஆபத்து
இதன் மூலம் இந்நிறுவனத்தின் நடுத்தர மற்றும் உயர் நிலை அதிகாரிகளுக்கு வியர்த்துள்ளது. யாரை எப்போதுவேண்டுமானலும் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற நிலையில் தான் இவர்கள் உள்ளனர்.
ஆரம்பப் பணியாளர்கள் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்துவிட்டனர் என்றே கூறலாம்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
சென்னையில் நோக்கியா நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூடம் உள்ளதால், இப்பிரிவில்பணியாற்றும் அல்காடெல் லூசன்ட் நிறுவன பணியாளர்கள் சிக்கலில் உள்ளனர்.
அல்காடெல் லூசன்ட் இந்தியா
இந்தியாவில் இந்நிறுவனத்தில் 100க்கும் அதிகமான சேல்ஸ் பணியாளர்கள், 2500க்கும் அதிகமான இன்ஜினியர் மற்றும்விஞ்ஞானிகள் இந்தியாவில் உள்ள முன்று கிளைகளில் (சென்னை, கூர்கான் மற்றும் பெங்களூரு) பணியாற்றிவருகின்றனர்.
நோக்கியா
இதுகுறித்து நோக்கியா நிறுவனம் எந்தவிதமான தகவல்களையும் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கவில்லை.
முக்கிய வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் அல்காடெல் லூசன்ட் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியாசெல்லூலார் ஆகிய நிறுவனங்கள் உள்ளது.
ராஜீவ் சூரி
தற்போது நோக்கியா நிறுவனத்தின் தலைவராக ராஜீவ் சூரி உள்ளார். இவர் ஒரு இந்தியர், இவரது தலைமையில் தான்நிறுவன இணைப்பு நடைபெற்றது.
மேலும் இவரின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனத்தின் டெலிகாம் உபகரணங்களின் வர்த்தகம் பல மடங்குஉயர்ந்ததுள்ளதாக நோக்கிய குறிப்பிடத்தக்கத்து.
இவரைப் பற்றித் தெரியுமா..
நோக்கியாவின் தலைவர் ராஜீவ் சூரி பற்றித் தெரிந்துகொள்ள


Click it and Unblock the Notifications