8,000 புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முடிவு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது ஏடிஎம் நெட்வொர்க்கில் 8,000 புதிய ஏடிஎம்-களை இணைக்க உள்ளதாகப் புதன்கிழமை தெரிவித்து.

 

இதன் மூலம் இவ்வங்கியின் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிக்கவும், பணப்பரிமாற்றம் அதிகரிப்பதன் மூலம் வங்கியின் வர்த்தகமும் உயரும் என எஸ்பிஐ வங்கி நம்புகிறது.

8,000 ஏடிஎம் இயந்திரங்கள்

8,000 ஏடிஎம் இயந்திரங்கள்

'எங்களது ஏடிஎம் நெட்வொர்க்கில் 2,000 டெப்பாசிட் செய்யும் ஏடிஎம்கள், 2,000 பணம் எடுக்கும் ஏடிஎம்கள், இரு சேவைகளையும் அளிக்கும் 4,000 ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்' என்று இவ்வங்கியின் நேஷ்னல் வங்கியியல் மற்றும் குரூப் நிர்வாகத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

மொத்த இயந்திரங்கள்

மொத்த இயந்திரங்கள்

இந்தியாவில் எஸ்பிஐ வங்கியின் கட்டுப்பாட்டில் 43,000 ஏடிஎம்-கள் செயல்படுகிறது. இதன் மூலம் தினமும் 2,400 கோடிரூபாய் டெப்பாசிட் செய்யப்படுகிறது.

ஒரு மாத்தில் சுமார் 25 கோடி பரிமாற்றங்கள் செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஏடிஎம் கட்டணம்

ஏடிஎம் கட்டணம்

புதிய ஏடிஎம் கட்டண உயர்வின் விளைவைப் பற்றி ஸ்ரீராம் அவர்களிடம் கேட்ட போது, "காலாண்டு முடிவுகள் வெளிவந்தால் தான் இதன் பற்றிய நிலை தெரியவரும்" என்று அவர் கூறினார்.

அமெரிக்க நிறுவனம்
 

அமெரிக்க நிறுவனம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவ உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் அனைத்தும் அமெரிக்க நிறுவனமான NCR அளிக்கஉள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள 47 சதவீத ஏடிஎம்கள் இந்நிறுனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

40 சதவீத செலவீண குறைப்புட

40 சதவீத செலவீண குறைப்புட

புதிய ஏடிஎம்கள் பயன்படுத்துவதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுமார் 40 சதவீத செலவீணத்தைக் குறைக்கமுடியும் என என்சிஆர் நிறுவனம் தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI plans to add 8,000 more ATMs this fiscal

State Bank of India (SBI) said on Wednesday it plans to add another 8,000 ATMs for both accepting and dispensing cash, to ramp up its existing network.
Story first published: Thursday, April 16, 2015, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X