பெங்களூரு: 2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் அளவு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது, இதன் எதிரொலியாக இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 3.65 சதவீதசரிவை சந்தித்தது.
நிறுவன லாப அளவீடு 30% குறைந்தாலும், பங்குச்சந்தையில் இறங்கி 10 ஆண்டுகள் நிறைவுற்றதைச் சிறப்பிக்கும் வகையில் பணியாளர்களுக்குப் போனஸ் அளிக்க டிசிஎஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
லாப அளவு உயர்வு
4வது காலாண்டில் 30 சதவீத சரிவை சந்தித்தாலும், ஆண்டு மொத்த வருமானத்தில் சுமார் 7.7 சதவீத உயர்வைச்சந்தித்ததுள்ளது டிசிஎஸ் நிர்வாகம். இதன் மூலம் இந்நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் 5,773 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது.
வருவாய்
கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருவாய் 12.4 சதவீதம் உயர்ந்து 24,220 கோடி ரூபாயைப்பெற்றுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி
காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகளை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்நிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரி என்.சந்திரசேகரன், 'காலாண்டு முடிவுகள் மோசமாக இருந்தாலும், நிறுவனத்தின் கடுமையானமுயற்சியின் மூலம் வருடாந்திர முடிவுகள் சிறப்பான நிலையை அடைந்துள்ளது.' என அவர் கூறினார்.
கிளவுட் மற்றும் டிஜிட்டல்
இந்நிறுவனத்தில் கிளவுட் மற்றும் டிஜிட்டல் சேவைகள் குறைந்த காலகட்டத்தில் 55 சதவீதம் வளர்ந்து 125 மில்லியன்டாலர் வருவாய் பெற்றுள்ளது எனச் சந்திரசேகரன் தெரிவித்தார்.
பாதிப்பு
2014ஆம் நிதியாண்டில் எனர்ஜி/ஆயில், டெலிகாம், டெலிஜென்டா இன்சூரன்ஸ் துறைகளின் வர்த்தகம் அதிகளவில் பாதித்ததாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈவுத்தொகை
2014ஆம் நிதியாண்டுக்கான இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகையாக ஒரு பங்கிற்கு 24 ரூபாய் அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கை குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications