மும்பை: நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவில் 23,566 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்த நிலையில் 4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவீடு 8.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
8.5 சதவீத வளர்ச்சி
மார்ச் 31,2015ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு 8.5 சதவீதம் உயர்ந்து 6,381 கோடிரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்படுகையில் இதன் அளவு 5,881 கோடி ரூபாயாகும்.
கணிப்புகள்
கச்சா எண்ணெய் விலை மற்றும் ரிலையன்ஸ் சுத்திகரிப்புத் துறையில் இருந்த சில பிரச்சனையின் காரணமாகஇந்நிறுவனத்தின் லாப அளவீடு குறைவாக மதிப்பீடப்பட்டது.
ஆனால் ரிலையன்ஸ், தடைகளைத் தாண்டி கணிப்புகளை உடைத்து அதிகளவிலான லாபத்தைச் சந்தித்ததுள்ளது.
விற்றுமுதல்
2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் அளவு 33.3 சதவீதம் குறைந்து 70,863 கோடிரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,06,208 கோடி ரூபாயாக இருந்தது.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகளவில் குறைந்துள்ளதால், இந்நிறுவனத்தின் லாப அளவுபாதித்ததாக ரிலையன்ஸ் தெரிவிக்கிறது.
வருடாந்திர லாப அளவு
ரிலையன்ஸ் நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் மொத்த லாப அளவு 4.8 சதவீதம் உயர்ந்து 23,566 கோடி ரூபாயாக உள்ளது. 2014ஆம் நிதியாண்டின் இந்நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் (Turnover) 13 சதவீதம் குறைந்து 3,88,494 கோடி ரூபாயாகஉள்ளது.


Click it and Unblock the Notifications