டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி அதிகளவில் குறைந்துள்ளதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மார்ச் மாதத்தில் 11.79பில்லியன் டாலரை எட்டி நான்கு மாத சரிவை சந்தித்தது.
இதனால் ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய்
கடந்த நிதியாண்டின் ஜூன் மாதம் முதலே கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நாட்டின்இறக்குமதி மதிப்பு அதிகளவில் குறைந்தது. இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மேம்பட்டது.
இதன் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி கட்டணங்களை மத்திய அரசு குறைத்தது.
மோடியின் இலக்கு
பிரதமர் மோடி பதவியேற்றிய நாள் முதல் உலகின் பல முக்கியப் பொருளாதார நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்,இதில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அடக்கம்.
இந்தப் பயணங்களின் மூலம், இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த 4 வருடங்களில்நாட்டின் ஏற்றுமதி அளவு 900 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்யுள்ளது.
2014ஆம் நிதியாண்டு
வெள்ளிக்கிழமை மத்திய அரசு வெளியிட்ட வருடாந்திர வர்த்தக நிலை அறிக்கையில் நாட்டின் ஏற்றுமதி 1.2 சதவீதம்குறைந்து 310.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இறக்குமதியில் இதன் அளவு 0.6 சதவீதம் குறைந்து 447.6 பில்லியன்டாலரை அடைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை
இதன் மூலம் நாட்டின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறை 137 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன்அளவு 135.8 பில்லியன் டாலராக இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications