வாஷிங்டன்: அமெரிக்க அலுவலகங்களில், டிசிஎஸ் நிர்வாகம் சட்டத்திற்கு எதிராக அதிகப்படியான இந்தியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளதாக இந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க ஊழியர் ஸ்டீவன் ஹெல்ட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் உலக நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கச் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாகப் பணியாளர்கள் நியமனத்தில், டிசிஎஸ் பாரபட்சம் காட்டுவது இந்நிறுவனத்திற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
95 சதவீத பணியாளர்கள்
மேற்கு மாவட்ட கலிப்போர்னியா நீதிமன்றத்தில் ஸ்டீவன் தொடுத்த வழக்கில், அமெரிக்க அலுவலங்களில் பணிபுரியும்14,000 பணியாளர்களில் 95 சதவீதம் பேர் தென் ஆசியா பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும் இதில் அதிகப்படியானோர் இந்தியர்கள் என்று தனது குற்ற அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் பணியாளர்கள் நியமனத்தில் அதிகளவிலான இனப் பாகுபாட்டைக் காட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெடரல் சிவில் சட்டங்கள்
தென் ஆசிய பணியாளர்கள் அல்லாதோரை, பணியில் சேர்ப்பதில் துவங்கி (Hiring), பணியில் அமர்த்தல்(Placement), பணியில் இருந்து நீக்குதல் (termination) போன்ற அனைத்திலும் சர்வதேச பணியாளர் நியமன சட்டத்திற்குப் புறம்பாக டிசிஎஸ் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவன் ஹெல்ட் வெளியேற்றம்
மார்ச் 2014ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவன் ஹெல்ட் இரண்டு வருட பணி காலத்தில் 5 பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாகவும், அவை அனைத்து தனக்குரிய திறன் மற்றும் அனுபவத்திற்குச் சம்பந்தம் இல்லாத பணியிடங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தானும் பாதிக்கவர்களில் ஒருவர் என்றும் ஸ்டீவன் கூறுகிறார்.
டிசிஎஸ் நிர்வாகம்
டாடா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பென் டுரோன்சன் ராயிட்டர்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஸ்டீவன் ஹெல்ட் அவர்களின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது' என்று தெரிவித்தார்.
பணி நியமனம்
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் அனைவரும் பாரபட்சமற்ற நியாயமான முறையிலேயே நியமிக்கப்படுகிறார்கள், மேலும் இதில் இனம் அல்லது நாடு அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லை என்று பென் டுரோன்சன் கூறினார்.
விசா மோசடி
டிசிஎஸ் நிறுவனத்தில் திறமையான பணியாளர்களுக்கு அளிக்கப்படும் ஹெச்1-பி விசாவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, கடந்த மாதம் கேப்பிடால் ஹில் விசராணைக்கு வந்தது. இவ்வழக்கின் முடிவுகள் கூடிய விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்ற வழக்கில் இன்போசிஸ் நிறுவனம் சிக்கி, அதற்காக அமெரிக்க அரசுக்கு 34 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கத்து.


Click it and Unblock the Notifications