ஹெச்சிஎல்: லாபத்தில் 3.6 சதவீத உயர்வு, பங்குச் சந்தையில் 6.2 சதவீத சரிவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஹெச்சிஎல் 2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு சுமார் 3.6 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகளவிலான மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 4வது இடத்தில் இருக்கும்ஹெச்.சி.எல் நிறுவனத்தின் லாபத்தின் அளவு, டாலர் மதிப்பில் ஏற்பட்ட அதிகப்படியான மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

காலாண்டு லாப அளவு

காலாண்டு லாப அளவு

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவுடைந்த காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் 1,683 கோடி ரூபாய் (267 மில்லியன் டாலர்) லாபம் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 1,624 கோடி ரூபாயாக இருந்தது.

சந்தை கணிப்புகள்

சந்தை கணிப்புகள்

இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் 1,815 கோடி ரூபாயை எட்டும் எனச் சந்தை கணிப்புகள் கூறுகிறது. டாலர் மதிப்பில்ஏற்பட்ட அதிகப்படியான மாற்றங்களின் காரணமாக நிறுவனத்தின் லாப அளவு அதிகளவில் குறைந்துள்ளதாக ஹெச்சிஎல்தெரிவித்துள்ளது.

11 சதவீத லாபம்

11 சதவீத லாபம்

இந்நிறுவனத்தின் வரி முந்தைய லாப அளவு 22.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தை ஒப்பிடும்போது இதன் அளவு 26.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்நிறுவனத்தின் மொத்த லாபம் அளவு 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

 

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 6.42 சதவீதம் குறைந்து 866.00 ரூபாயில் வர்த்தகம்செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 961.70 ரூபாயில் இருந்து 866.00 ரூபாய் வரை குறைந்துள்ளது.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்நிலையில் விப்ரோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் அளவு 2.7சதவீதம் குறைந்து 3,161.5 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL Tech March quarter profit up 3.6%, lags estimates; stock falls 6.2%

HCL Technologies Ltd, India's fourth-largest software services exporter by revenue, reported a 3.6 per cent rise in quarterly net profit on Tuesday, lagging street estimates as margins dropped due to currency volatility.
Story first published: Tuesday, April 21, 2015, 11:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X