டெல்லி: நாட்டின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒருவாரான ஜாப்பான் டாய்ச்சி சேங்க்யோ, தனது கட்டுப்பாட்டில் இருந்த 9 சதவீத சன் பார்மா பங்குகளை 20,420 கோடி ரூபாய்க்குமுழுமையாக விற்றுவிட்டது.
ரான்பாக்ஸி நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளில் முதலீடு செய்திருந்த டாய்ச்சி சேங்க்யோ, சன் பார்மா கைப்பற்றுதலுக்குப் பின் 9 சதவீத பங்குகளைப் பெற்றது.
தற்போது அனைத்தையும் விற்றுவிட்டு ஜப்பானுக்கே டாய்ச்சி சேங்க்யோ நிறுவனம் செல்கிறது.
சன் பார்மா - டாய்ச்சி சேங்க்யோ டீல்
ஜப்பானில் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமாகத் திகழும் டாய்ச்சி சேங்க்யோ நிறுவனம், சன் பார்மாவில் முதலீட்டுநிறுவனமாக மட்டும் இருக்க விருப்பம் இல்லாமல் தனது 22,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்க திட்டமிட்டது.
10% சலுகை
வெளிச்சந்தையில் விற்றால் பங்கு மதிப்பு அதிகளவில் குறைந்துவிடும் என்பதை உணர்ந்த டியாச்சி, சன் பார்மாநிறுவனத்திற்கே தனது 9% பங்குகளை 10% சலுகையுடன் 20,420 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.
சன் பார்மா தப்பித்தது..
டியாச்சி வெளிச் சந்தையில் விற்று இருந்தால் பங்குச்சந்தையில் சன் பார்மாவின் பங்கு மதிப்பு ஆட்டம் கண்டிருக்கும்.நாசுக்காகப் பேசி மொத்த பங்குகளையும் வாரி சுருட்டிக் கொண்டது சன் பார்மா.
பங்குச்சந்தை
இதன் காரணமாகவே திங்கட்கிழமை பங்குச் சந்தையில் 555 புள்ளிகள் சரிந்தபோதும், சன் பார்மா நிறுவன பங்குகள்லாபத்தைச் சந்தித்தது.
கடைசியில் நட்டம்...
2008ஆம் ஆண்டு ரான்பாக்ஸி நிறுவனத்தின் 63.45 சதவீத பங்குகளில் முதலீடு செய்த 22,000 கோடியில் டியாச்சி நிறுவனம் 6வருடத்திற்குப் பிறகு 20,240 கோடி மட்டுமே பெற்றுள்ளது.
கடைசியில் இந்த ஜப்பான் நிறுவனம் 1,760 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளது.
ரான்பாக்ஸி-க்கு வந்த சிக்கல்
அமெரிக்காவில் தனது மருந்து தயாரிப்புகளுக்குத் தடைவிதித்ததால், ரான்பாக்ஸி நிறுவனத்தின் வர்த்தகம் கடுமையாகப்பாதித்தது. மேலும் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் 4 தயாரிப்பு ஆலைகளை அந்நாட்டு அரசு மூடியது.
4 பில்லியன் டாலர்
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரான்பாக்ஸி நிறுவனத்தை 4 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது சன் பார்மா. இதன்மூலம் அமெரிக்காவில் சன் பார்மா நிறுவனத்தின் வர்த்தகம் இரட்டிப்பானது.
ரான்பாக்ஸி நிறுவனத்தில் 63.45 சதவீத பங்குகளை டியாச்சி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications