மும்பை: கடந்த சில மாதங்களாகச் சர்வதேச சந்தையில் டாலரின் ஆதிக்கம் அதிகரித்ததால், அமெரிக்கா டாலருக்குஎதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 மாத சரிவை எட்டி 63 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.
இறக்குமதியாளர்களின் அதிப்படியான டாலர் தேவையின் காரணமாகவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு அதிகரித்துள்ளது.

நேற்றைய வர்த்தக முடிவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.82 ரூபாயில் இருந்து இன்று 3 பைசா வரை உயர்ந்து காணப்படுகிறது.
ஆசியாவில் அதிகளவில் வர்த்தகத்தில் இருக்கும் நாணயங்களில் ரூபாய் நாணயம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான அன்னிய முதலீடு மற்றும் அமெரிக்க வங்கிகளின் டாலர் விற்பனையால் ரூபாய்மதிப்பு உயர்ந்தது.

மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலகட்டத்தில் நாட்டின் நிலையான பணவீக்கம், வளர்ச்சி திட்டங்கள் மற்றும்பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு 0.85 சதவீதம் அளவு உயர்ந்தது.
அதுகுறித்து நிதியமைச்சகம் கூறுகையில் கூறுகையில், ரூபாய் மதிப்பு மீதான உயர்வு சில நாட்கள் வரை மட்டுமேநீடிக்கும், மேலும் இது தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications