பெங்களூரு: நாட்டின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தகாலாண்டில் 13,411 கோடி ரூபாய் வருவாயுடன் 10-12% வளர்ச்சியை எட்டியுள்ளது.
2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில், இன்போசிஸ் நிறுவனம் 12-14 சதவீதவளர்ச்சியை எட்டும் என நாஸ்காம் கணித்திருந்தது. இந்த குறைவான வளர்ச்சியின் மூலம் பங்குச் சந்தையில் 6 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
இன்போசிஸ்
விஷால் சிக்கா தலைமையில் இன்போசிஸ் நிறுவனம், கடைசிக் காலாண்டில் மொத்த லாபம் 3.5 சதவீத வளர்ச்சியுடன்3,097 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 4.2 சதவீதம் உயர்ந்து 13,411 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால்க ணிப்புகளின் அளவு 13,600 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த லாபம்
இக்காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் 3,097 கோடியாக உள்ளது. இது நாஸ்காம் கணிப்பை விட மிகக் குறைவானதாகும், மேலும் டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 3,055 கோடியாக இருந்தது.
டாலர் வருவாய்
மேலும் மார்ச் மாதம் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் 2,159 மில்லியன் டாலராக உள்ளது.
போனஸ்
இந்நிலையில் இன்போசிஸ் பங்குதாரர்களுக்கு 1:1 போனஸ் அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் படி 100 பங்குகள் வைத்திருக்கும் ஒரு பங்குதாரர், இவ்வறிவிப்பின் மூலம் 200 பங்குகளைப் பெறுவார்.
உலக நாடுகள்
இந்நிறுவனம் சர்வதேச அளவில் செயல்படுவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, வட அமெரிக்காவில் 0.7 வருவாய் சரிவும், ஐரோப்பாவில் 6.1 சதவீத சரிவும் இன்போஸில் சந்தித்துள்ளது.
பங்குச்சந்தை
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 102 புள்ளிகள் சரிந்து 2,014.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் இந்நிறுவனப் பங்குகள் 2,135 ரூபாயில் துவங்கி, 2,150 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது. சந்தை முடிவில் இதன் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications