"திருநங்கைகள்" மூன்றாவது பாலினமாக வங்கி அமைப்பில் இணைக்க ஆர்பிஐ உத்தரவு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய வங்கி அமைப்பில் ஆண், பெண் பாலின பிரிவில் மூன்றாவதாகத் திருநங்கைகளையும் இணைக்க ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

 

இதன் மூலம் இனி வங்கிகளில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், படிவங்கள் மற்றும் பிற சேவைகளில் என்ற அனைத்திலும் பாலின பிரிவில் திருநங்கைகள் இணைக்கப்பட உள்ளனர்.

இதன் மூலம் இவர்களுக்குக் கடன் உதவி, சேமிப்பு கணக்குபோன்ற அனைத்து வகையான வங்கி சேவைகளும் எளிமையாகப் பெற முடியும்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் திருநங்கைகள் வங்கி கணக்கு மற்றும் பிற வங்கி சேவைகள் பெறமுடியாத நிலையை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கை முறை மேம்பட இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்எனத் தெரிவித்தது.

பாலின பிரிவு

பாலின பிரிவு

ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளித்த ஆணையில், இனி வங்கிகளில் அளிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும்பாலின பிரிவில் மூன்றாம் பிரிவான திருநங்கைகள் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான வேலைகளை வங்கி நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள வேண்டும்," என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.

உச்ச நிதிமன்றம்

உச்ச நிதிமன்றம்

சுப்ரீம் கேர்ட்டில் இதற்காக நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் திருநங்கைகள் தங்களுக்கான பாலினத்தை வெளிப்படையாக அறிவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சட்டரீதியிலான அங்கீகாரம் அளித்துள்ளது.

வங்கிகள் பதில்
 

வங்கிகள் பதில்

ரிசர்வ் வங்கி ஆணையை ஏற்ற வங்கிகள், விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் உடனடியாக மாற்றத்தைச் செய்ய முடியும் என்றாலும், ஆன்லைன் சேவை மற்றும் பிற மென்பொருள் சேவைகளில் மாற்றம் செய்யச் சில வாரங்கள் தேவை எனத்தெரிவித்துள்ளது.

விரைவில் மாற்றம்

விரைவில் மாற்றம்

வங்கித் துறையில் நிகழ்ந்த இந்த மாற்றம் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் உருவாக்கப்படும் போது இவர்களின்வாழ்க்கை முறை கண்டிப்பாக மேம்படும்.

இவர்களும் சக மனிதர்களைப் போல இந்தியாவில் வாழ முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI asks banks to add 'third gender' column in all forms

RBI has directed banks to henceforth include 'third gender' in all their forms and applications, whether prescribed by the central bank or designed by the banks themselves.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X